வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (15:58 IST)

ஜி.வி பிரகாஷிற்கு உதவும் உதயநிதி ஸ்டாலின்

திருவல்லிக்கேணி – சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஜிவி.பிராகாஷின் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட உள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் சீனுராமசாமி. இவர் தென்மேற்குப் பருவக்காற்று, கண்ணெ கலைமானே, நீர்ப்பறவை, உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கத்தில் ஜிவி.பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தின் டைட்டில் லும் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை இன்று மாலை 5 மணிக்கு உடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுவார் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு மக்கள் அன்பன் என்ற பட்டத்தை சீனு ராமசாமி வழங்கியது குறிப்பிடத்தக்கது.