திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (17:02 IST)

முதல்வருக்கு கோயில் கட்டிய எம்.எல்.ஏ

ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள காளஹஸ்தியில் ஜெகன்னா காலனியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு காளஹஸ்தி எம்.எல்.ஏ.   மதுசூதனன் ரெட்டி பிரமாண்ட கோயில் கட்டியிருக்கிறார்.

மேலும், ஜெகன்மோகன் ரெட்டியின் தீவிர விசுவாசியாக அறியப்படும் காளஹஸ்தி எம்.எல்.ஏ. ஒருவர் மதுசூதனன் ரெட்டி,  சுமார் ரூ.2 கோடிக்கு மேல் செலவு செய்து, இக்கோயிலை கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது, இக்கோயிலில் மக்கள் தங்களின் பிரச்சனைகள் குறித்து மனு அளிக்க வேண்டி ஒரு உண்டிலும் வைத்திருக்கிறார். இது அங்குப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் ஆந்திர மாநில வரலாற்றில் முதன்முறையாக முதல்வருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது.