1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 11 மார்ச் 2021 (21:04 IST)

ஒரு தொகுதியை வாபஸ் பெற்றது அதிமுக: ஏன் தெரியுமா?

நேற்று அதிமுகவின் 171 வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில் அதில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதில்லை என அதிமுக வாபஸ் பெற்றுள்ளது
 
இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அந்த ஆறு தொகுதிகளில் ஒன்று லால்குடி ஆகும். ஏற்கனவே லால்குடி தொகுதியில் அதிமுக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு வேட்பாளரும் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதை அடுத்து லால்குடி தொகுதியில் அதிமுக போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.