1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK will take action against OPS son?

போஸ்டர் ஒட்டியவர் டிஸ்மிஸ் என்றால் வாழ்த்து தெரிவித்தவரை டிஸ்மிஸ் செய்யாதது ஏன்?

சசிகலா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று விடுதலை ஆன நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுகவினர் போஸ்டர் அடித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதும் ஒரு சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியவர்களை கட்சியிலிருந்து நீக்கம் செய்த அதிமுக, சசிகலா நலம் பெற வாழ்த்து தெரிவித்து டுவிட் செய்தவரையும் நீக்குமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்
 
சமீபத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சசிகலா நலம் பெற வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒபிஎஸ் மகன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற நெட்டிசன்களின் கேள்விகளுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் பதில் சொல்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
அடுத்த கட்டுரையில்
பட்ஜெட்டுக்கு முன் நிர்மலா சீதாராமன் கூறும் திருக்குறள் இதுதான்!