1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK whip rajendran meet with speaker dhanapal

சபாநாயகருடன் கொறடா ஆலோசனை; தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா?

தினகரன்
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பதில் அளிக்குமாறு அளித்த நோட்டீஸ் காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில் அரசு கொறடா சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.


 

 
முதலவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அணி சட்டசபையில் பெரும்பான்மையை இழந்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தன்னிச்சையாக செயல்பட்டதாக அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தார்.
 
இதையடுத்து கொறடாவின் புகார் குறித்து பதிலளிக்குமாறு சபாநாயகர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகர் பதில் அளிக்குமாறு அனுப்பிய நோட்டீஸ் காலக்கெடு இன்று முடிவடைகிறது. இந்நிலையில் அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 
 
இந்த ஆலோசனைக்கு பிறகு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் தற்போது தினகரன் அணியில் உள்ள 18 எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகாவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
காரை சற்றுதள்ளி நிறுத்த கூறிய முதியவரை சுட்டு தள்ளிய பெண்