1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Who is the first woman chennai mayor

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் இந்த மூவரில் ஒருவரா?

சென்னை
சமீபத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது என்பதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகளிலும் கைப்பற்றி உள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக 3 பேர்களை திமுக தலைமை பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது 
 
சென்னை மாநகராட்சியில் இதுவரை பெண்கள் யாரும் தயாராக இல்லாத நிலையில் முதல் முறையாக மார்ச் 6ஆம் தேதி பின் ஒருவராக பதவி ஏற்க உள்ளார் 
சென்னையில் உள்ள மொத்தம் 200 வார்டுகளில் 167 தொகுதிகளில் திமுக போட்டியிட்டு  153  இடங்களில் வென்று உள்ளதால் திமுக மேயரை தேர்ந்தெடுக்க உள்ளது 
 
மேயர் பதவிக்கு 74 வது வார்டில் போட்டியிட்ட ஆர் பிரியா, 100 வது வார்டில் போட்டியிட்ட வசந்தி பரமசிவம் மற்றும் 159 வது வார்டில் போட்டியிட்ட நந்தினி ஆகிய மூவரில் ஒருவர் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
அடுத்த கட்டுரையில்
விஜய் மல்லையா உள்பட தொழிலதிபர்களிடம் இருந்து ரூ.18 ஆயிரம் கோடி மீட்பு: மத்திய அரசு