தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. சில மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். மேலும், கோடை வெயில் கடுமையாக கொளுத்தி வருவதால் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் மதிய நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சில மாவட்டங்களில் அவ்வப்போது மிதமான மற்றும் லேசான மழை பெய்து வருகிறது. இன்றும் பத்து மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Edited by Siva