தொடர்புடைய செய்திகள்
- அரசுப் பணி காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: திமுக ஆட்சியின் தோல்விக்கு எடுத்துக்காட்டு! அன்புமணி
- டங்க்ஸ்டன் விவகாரத்தில் முதல்வரின் நாடகம் மக்களிடம் எடுபடாது.. செல்லூர் ராஜூ
- 13 ஆண்டுகளாகியும் பணி நிலைப்பு வழங்கவில்லை.. இதுதான் திமுக அரசின் சமூகநீதியா? டாக்டர் ராமதாஸ்
- கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறாரா விஜய்?
- திருப்பரங்குன்றத்தில் அசைவம் சாப்பிட்டதை நிரூபித்தால் பதவி விலக தயார்: நவாஸ் கனி எம்பி
காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய கார் மறிப்பு.., போதையில் இருந்த பொறுக்கிகள்.. அதிமுக அறிக்கை..!
காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய கார் மறித்ததாகவும், அந்த காரில் போதையில் இருந்த பொறுக்கிகளால் பெண்கள் அச்சப்பட்டதாகவும் அதிமுக அறிக்கை வெளியிட்டு இதுகுறித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளது. அந்த பதிவில் கூறியிருப்பதாவது:
சென்னை ECR-ல் காரில் சென்ற பெண்களை திமுக கொடி பொருத்திய கார் மறித்து, போதையில் இருந்த பொறுக்கிகள், கொடூரமான முறையில் பாலியல் ரீதியாகவோ, கொலை வெறியுடனோ, இதர நோக்கத்துடனோ தாக்குதல் நடத்த முயற்சித்த காட்சி!
ஸ்டாலின் ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில்,
சட்டம் இருக்கிறதா?
காவல்துறை இருக்கிறதா?
திமுக கொடியோடு, இப்படியொரு பதைக்க வைக்கும் குற்றத்தை செய்பவர்களை கைது செய்ய வேண்டிய காவல்துறை, "இரவு நேரத்தில் உங்களை யார் வெளியே போகச் சொன்னது" என்று காரில் சென்ற பெண்களைப் பார்த்து கேட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் பொறுக்கிகளின் பின்னணியில் திமுக அடையாளம் இருப்பதும், காவல் துறை மவுனம் காப்பதும் தொடர்வது வெட்கக்கேடு!
இந்த வழக்கில் FIR பதியப்படுமா? பதியப்பட்டாலும் பெயர் வெளியில் லீக் ஆகாமல் இருக்குமா?
இந்த பொறுக்கிகளுக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள் முக ஸ்டாலின்? ஆதரவாளர்களா? அனுதாபிகளா?
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
