வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 28 ஏப்ரல் 2016 (18:37 IST)

பாத்திமா பாபு சர்ச்சை பேச்சு: இஸ்லாம் குறித்து விமர்சனம்?

அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான பாத்திமா பாபு இஸ்லாம் மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக புகார் எழுந்துள்ளது. பிரச்சாரத்துக்கு தடை விதிக்க மனித நேய மக்கள் கட்சி கோரிக்கை.


 
 
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களின் பட்டியலை சமீபத்தில் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது அதிமுக, இந்த பட்டியலில் மூத்த அமைச்சர் பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெறாத நிலையில் பாத்திமா பாபுவின் பெயர் இடம் பெற்றது.
 
நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்துடன் ஈரோட்டில் அதிமுக சார்பாக பிரச்சாரம் செய்தார் பாத்திமா பாபு. இதில் பேசிய அவர், இஸ்லாமியர் தங்களின் உயிரினும் மேலாக மதிக்கக் கூடிய முகம்மது நபிகள், ஒவ்வொருவரின் தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது’ என்று கூறி இருக்கிறார். அப்படி பார்க்கையில் ஜெயலலிதா அம்மாவின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
 
மேலும் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரும் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போட வேண்டும் என்றார் பத்திமா பாபு. பாத்திமா பாபுவின் இந்த பேச்சு தங்கள் மனதை புண்படுத்துகிறது என மனித நேய மக்கள் கட்சி கூறியுள்ளது.
 
பத்திமா பாபு மீது வழக்கு பதிவு செய்து அவரது பிரசாரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளது மனித நேய மக்கள் கட்சி. இந்த மனுவை கண்டு கொள்ளவில்லை என்றால் பாத்திமாபாபுவுக்கு எதிராக கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் செய்யப்படும் என்றனர்.