திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (17:40 IST)

பாஜக கூட்டணி முறிவுக்கு அதிருப்தி தெரிவிக்கும் அதிமுகவின் சில தலைவர்கள்.. உடைகிறதா கட்சி?

ADMK
பாஜகவுடன் இனி கூட்டணியில்லை என நேற்று அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை அடுத்து அதிமுகவின் தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பதும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார் என்பதையும் பார்த்தோம். 
 
ஆனால் அதிமுகவில் உள்ள சில சீனியர் தலைவர்கள் இந்த முடிவு அதிருப்தியை அளித்துள்ளதாக கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அதிமுகவில் உள்ள மூன்று சீனியர் தலைவர்கள் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முடிவை விரும்பவில்லை என்றும் நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவுக்கு அதிருப்தி தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது 
 
எனவே இந்த அதிருப்தி தலைவர்களை வைத்து அதிமுகவை உடைக்க பாஜக முயற்சி செய்யுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva