கெத்து காட்டும் ஓபிஎஸ்... ஆளுயர மாலை, மூகமூடி, போஸ்டர்னு கலக்கல் வரவேற்பு!!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 28 செப்டம்பர் 2020 (10:52 IST)
செயற்குழு கூட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வத்தை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் பல ஏற்பாடுகளை செய்து கலக்கினர். 
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. மேலும் கூட்டணி பேச்சு வார்த்தைகளும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.  
 
இந்நிலையில் அதிமுக செயற்குழு இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெர்ற்று வருகிறது. இந்த செயற்குழு கூட்டத்திற்கு ஓ.பன்னீர் செல்வத்தை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் பல ஏற்பாடுகளை செய்து கலக்கினர். 
 
'ஜெயலலிதாவின்  அரசியல் வாரிசே' என்ற பதாகைகளுடனும்,  துணை முதல்வரின் முகமூடி அணிந்து வந்த ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆளுயர மாலை அணிவித்து, கையில் வாள் கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். 


இதில் மேலும் படிக்கவும் :