1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 24 செப்டம்பர் 2020 (12:47 IST)

விஜயகாந்த் உடல்நலம் பெற பிரமுகர்களின் டுவீட்!

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு லேசான கொரோனா பாதிப்பு இருந்ததாகவும், தற்போது அவர் குணமாகி உடல்நலத்துடன் இருப்பதாகவும் தலைமைகழகம் சற்றுமுன் அறிக்கை வெளியிட்ட செய்தியை பார்த்தோம். இந்த நிலையில் அவர் விரைவில் பூரண நலம் பெற பிரமுகர்கள் தங்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர்.
 
துணை முதல்வர் ஓபிஎஸ்:  ‘உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் அன்புச் சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைந்து இயல்புநிலை திரும்பிட இறைவனை வேண்டிக் கொள்கிறேன்
 
நடிகர் சரத்குமார்: ‘தேமுதிக தலைவரும், அருமை நண்பருமான திரு.விஜயகாந்த் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்
 
நடிகர் ராதாரவி: எனது நீண்ட கால நண்பரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற செய்திக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் பூரண நலம்பெற்றுத் திரும்ப இறைவனைப் பிரார்த்திக்கிறேன். விரைவில் அவர் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்புவார். இந்த தருணத்தில் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோள். இன்னும் நாம் கொரோனாவிலிருந்து முழுமையாக மீளவில்லை. தயவு செய்து சமூகப் பொறுப்புடன் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடியுங்கள். அடிக்கடி கைகளைச் சுத்தமாக சோப்பு போட்டுக் கழுவுங்கள். கொரோனாவிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்வோம்.