Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து அதிமுக வேட்பாளர் பட்டியல்; கூட்டணி என்னாச்சு? – அதிர்ச்சியில் பாஜக!

Written By Prasanth Karthick
Updated: திங்கள், 31 ஜனவரி 2022 (13:27 IST)
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டு வரும் நிலையில் பாஜக கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் அதிமுக – பாஜக இடையே நேற்று முதலாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே அதிமுக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. அதை தொடர்ந்து இன்று பாஜக கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமி சேலம் புறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து தற்போது ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகி வரும் நிலையில் பாஜக கூட்டணி குறித்து அறிவிக்கப்படாதது பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

பிரேமலதாவும், சுதீஷும் நல்ல பெர்ஃபார்ம் பண்றாங்க!.. ChatGPT சொல்லுது!.. சிரிக்க வைக்கும் தேமுதிக!..

சிறு வயதிலேயே ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால்!.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்!...

காவிரி நீரை பெற தமிழகத்துக்கு சட்டப்படி உரிமை உண்டு!.. ஆனால்!.. டி.கே.சிவக்குமார் பேச்சு!..

நேபாளத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு!.. தமிழர்கள் உட்பட 400 பேர் மாயம்!...

உதயநீதி மீண்டும் கைது செய்யப்படுவாரா?!... மகளிர் ஆணையம் அதிரடி நடவடிக்கை....

அடுத்த கட்டுரையில்
Show comments