1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. admk release new election manifesto

குடும்ப தலைவிக்கு ஒரு ஃபிரிட்ஜ்!.. அதிமுக தேர்தல் அறிக்கை!..

eps
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என அதிமுக நினைக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே சில தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட நிலையில் தற்போது பல புதிய தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக வெளியிட்டிருக்கிறது.

அனைத்து குடும்ப தலைவருக்கும் மாதம் 2000 உதவித்தொகை.

பெண்களைப் போல ஆண்களுக்கும் அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்திட்டம்.

அம்மா இல்லம் திட்டம் மூலம் வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டி தரப்படும்..

125 நாட்கள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்..

கைத்தறி நெசவாளர்களுக்கு 1400 யூனிட் இலவச மின்சாரம்..

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வருடத்திற்கு 3 விலையில்லா சிலிண்டர்கள்..

விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 10,000 உதவித்தொகை..

மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை 12 ஆயிரமாக உயர்த்தப்படும்..

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருடம் தோறும் ரூபாய் ஆயிரம் 1000 பொங்கல் பரிசு தொகை..

கூட்டுறவுகளில் சிறு வியாபாரிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி..

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா பெட்டி வழங்கப்படும். ரேஷன் கடைகளில் விலையில்லா ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் வழங்கப்படும்..

டாஸ்மாக் மதுபான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்..
அடுத்த கட்டுரையில்
திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எவ்வளவு சீட்!.. கரன்ட் அப்டேட்!....