1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. ADMK refuse about Jayalalithaa's Singapore treatment

ஜெயலலிதாவின் சிங்கப்பூர் சிகிச்சை: அதிமுக மறுப்பு

ஜெயலலிதாவின் சிங்கப்பூர் சிகிச்சை: அதிமுக மறுப்பு

ஜெயலலிதா
தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.


 
 
அவர் குணமடைந்து விட்டதாக பலமுறை மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது. ஆனால் அவர் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பிலே உள்ளார். இன்னமும் வீடு திரும்பவில்லை.
 
இந்நிலையில் அவர் சுகர் மற்றும் கிட்னி சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாக செய்திகள் பரவியது. இதனையடுத்து முதலமைச்சர் ஜெயலலிதா சிங்கப்பூருக்கு சிகிச்சைக்கு செல்ல இருப்பதாக வந்த தகவலை அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி மறுத்துள்ளார்.
About Writer
Caston
அடுத்த கட்டுரையில்
கபாலி படத்தால் தமிழக அரசுக்கு ரூ.50 கோடி நஷ்டம்?: விரைவில் விசாரணை!