திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 14 நவம்பர் 2018 (09:04 IST)

கமல் ஒரு அரசியல் பிச்சைக்காரர் –அதிமுக நாளேடு சாடல்

இலவச நலத்திட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசனை அதிமுக நாளேடு அரசியல் பிச்சைக்காரர் என சாடியுள்ளது.

சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் மக்களுக்காக அரசு வழங்கும் இலவசப் பொருட்களை ஊழல் திட்டங்கள் போல சித்தரித்ததால் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கியது. இது குறித்து தனது கருத்தைப் பதிவு செய்த கமல் இலவசங்கள் பிச்சைக்காரர்களுக்குதான் வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கருத்திற்கு எதிர்வினையான அதிமுக நாளேடான நமது அம்மா ஒரு செய்தியை வெளியிட்டு கமலை கடுமையாக விமர்சித்துள்ளது. அதில் ‘இலவசங்கள் பிச்சைக்காரர்களுக்குதான் வேண்டுமென்றால் கமல் ஏன் மாற்றுத் திற்னாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்குகிறார். மக்களின் வரிப்பணமாக அரசுக்கு வருவதை மறுபடியும் மக்களுக்கே கொண்டு செல்வதற்காக இந்த திட்டங்கள் அமல்படுத்தப் படுகின்றன. இதை உள்வாங்காத உளறல் நாயகன் தொடர்ந்து இந்த அரசின் மீது வன்மத்தைக் கக்குகிறார்.’

’கட்சி தொடங்கி விட்டீர்கள், அதை நடத்துவதற்கான பணத்திற்கு என்ன செய்யப்போகிறீர்கள் என ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட போது அதை தொண்டர்களிடம் இருந்து பெறுவேன் என கூறிய கமல்ஹாசனை வேண்டுமானால் அரசியல் பிச்சைக்காரர் என அழைக்கலாம்’ என செய்தி வெளியிட்டுள்ளது.