1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : செவ்வாய், 13 நவம்பர் 2018 (13:47 IST)

இந்தியன் 2-வில் கமலுடன் கைகோர்க்கும் சிம்பு..!

கமல் ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.
 
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படம் இந்தியன் 2. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
 
தற்போது படப்பிடிப்பிறகான செட்டும் போடப்பட்டு வருகிறது. தெலுங்கு பட தயாரிப்பாளர் டில் ராஜூ இப்படத்தை தயாரிக்கிறார் என்று கூறப்பட்டது. அதன் பிறகு நிதி பிரச்சனை காரணமாக இப்படத்தை லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில், விரைவில் தொடங்கப்பட இருக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல் ஹாசனுடன் இணைந்து நடிகர் சிம்பு மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 
 இப்படத்தில் நடிப்பதற்கு அவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து முறையான அறிவிப்பு படக்குழுவினர் தரப்பில் இருந்து விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.