திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 14 நவம்பர் 2018 (08:08 IST)

களைகட்டும் அதிமுக அலுவலகம்- பின்னணி என்ன?

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புதிய சிலை இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் திறக்கப்பட இருக்கிறது.

தமிழக முன்னாள் முதல்வர் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். அதனால் அவரது கட்சியினர் அவரது 70 வது பிறந்தநாளான 2018பிப்ரவரி 24 அன்று அவரது முழு உருவச்சிலையை திறக்க ஏற்பாடு செய்தனர்.

சிலை வடிக்கும் பொறுப்பை ஆந்திராவை சேர்ந்த சிற்பி ஒருவரிடம் ஒப்படைத்தனர். சிலையும் தயாரானது. சிலை திறந்த போதுதான் பொது மக்களும் அதிமுக தொண்டர்களும் ஒரு விஷயத்தைக் கவனித்தனர். திறக்கப்பட்ட சிலைக்கும் ஜெயலலிதாவின் உருவத்திற்கும் ஒற்றுமையே இல்லை என்பதை. அதையடுத்து  சமூக வலைதளங்களில் பலவாறான விமர்சனங்கள் எழுந்தன.

எல்லாவற்றையும் விட ஒரு படி மேலேப் போய் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் சிலைக்கு பக்கத்தில் இது ஜெயலலிதா சிலை என போர்டு வையுங்கள் என கேலி செய்தார். அதனால் உஷாரான அதிமுகவினர், தொண்டர்களிடம் வருத்தம் தெரிவித்தனர். கூடிய விரைவில் வேறு சிலை அமைக்கப்படும் எனத் தெரிவித்தனர். அந்த சிலையில் அங்கிருந்து அகற்றப்பட்டது.

அதையடுத்து புது சிலை செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்னர் சிலை செய்யும் பணிகள் நிறைவுற்று சிலை அதிமுக அலுவலகத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. அதையடுத்து இன்று காலை 9.30 மணிக்கு சிலை திறப்பு விழா முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் முன் நடைபெற இருக்கிறது.