வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 26 ஜூன் 2024 (20:09 IST)

அதிமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்டை கண்டித்து உண்ணாவிரதம்.. காவல்துறை அனுமதி..!

admk office
சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் என சபாநாயகர் அப்பாவு அறிவித்ததை கண்டித்து அதிமுக சார்பில் உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ள நிலையில் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
 எழும்பூர் ராஜநாகத்தில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முதலில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்த அதிமுக தரப்பில் அனுமதி கேட்டிருந்த நிலையில் அதற்கு மறுத்த காவல்துறை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்திக் கொள்ளலாம் என அனுமதி அளித்துள்ளது.
 
இதனை அடுத்து நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடைபெறும் என்று அதிமுக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை அனுமதி அளித்த இடத்தில் மட்டும் தான் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் போராட்டம் நடத்தக்கூடாது என்றும் இந்த போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை தரப்பிலிருந்து நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran