திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 26 மே 2018 (20:36 IST)

பொதுமக்கள் மீது இரக்கம் கொள்ளாத அமைச்சர் அரசுப் பேருந்துகள் மீது இரக்கமா ? அமைச்சரின் சர்சை பேட்டி

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தூத்துக்குடியில் பேருந்துகள் சேதமடைந்ததற்கு வருந்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சொந்த தொகுதியும், சொந்த மாவட்டமும் ஆன, கருர் மாவட்டத்தில் நேற்று வரை பேருந்துகள் ஆய்வு செய்யபடாத நிலையில், மந்த நிலையில் இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆய்வின் முடிவுகள் குறித்து விரிவாக கூறியதோடு, தூத்துக்குடி சம்பவத்தினை மனதில் கொண்டு, அங்குள்ள அரசுப்பேருந்து ஒன்று தீ வைக்கப்பட்டுள்ளதாகவும்., அங்கு நிறைய அரசுப்பேருந்துகள் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, ரொம்ப பீல் பண்ணி சொன்னார்.    

தூத்துக்குடி வன்முறையினால் தமிழகம் மட்டுமில்லாது, உலகளவில் உள்ள தமிழர்கள் மற்றும் பொது நல ஆர்வலர்கள் மட்டுமில்லாமல், சமுக நல ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த கலவரத்தினால் ஒரு அரசுப்பேருந்து ஒன்று நேற்று (25-05-18) முற்றிலும் எரிக்கப்பட்டு சேதம் அடைந்துள்ளதாகவும், நிறைய அரசுப்பேருந்துகள் முற்றிலும் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளது என்றும், மக்கள் மீது பரிதாபப்படாமல், துப்பாக்கிச்சூட்டினால் உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள் மற்றும் தடியடியால் பாதிக்கப்பட்ட மக்கள் என்று அனைவரும் ஆங்காங்கே கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், அங்குள்ள மக்களை பற்றி கவலைப்படாமல்.,. அரசுப்பெருந்து ஒன்று நேற்று எரிக்கப்பட்டுள்ளது. அந்த பேருந்து முற்றிலும் சேதம் அடைந்தது என்றும் ஏராளமான பேருந்துகள் அடித்து நொறுக்கப்படுள்ளதாகவும், அரசுப்பேருந்துகளுக்காக பீல் செய்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் செயலினால், பல்வேறு கட்சியினர் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் பெரும் அதிர்ப்தியினை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் அதே பிரஸ் மீட் நிகழ்ச்சியில். நிருபர் ஒருவர், தூத்துக்குடி வன்முறை சம்பந்தமாக எந்த ஒரு அமைச்சரும் சென்று பார்க்க வில்லை என்று கேள்வி கேட்டதற்கு, ஆத்திரமடைந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், டிப்பார்ட்மெண்ட் ரீதியாக மட்டும் கேள்வி கேட்கவும், உங்களின் கேள்விகளுக்கு முதல்வரும், துணை முதல்வரும் பதில் சொல்வார்கள் என்று முடித்துக் கொண்டார்.