திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 26 மே 2018 (14:35 IST)

தூத்துக்குடி தூப்பாக்கி சூடு சம்பவம்: இயக்குனர்கள் போராட்டம்

தூத்துக்குடியில் நடந்த தூப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக சங்கம் சார்பில் இயக்குனர்கள் போராட்டம் நடத்தினர்
 
ஸ்டெர்லைட் அலையை மூட கோரி தூத்துகுடியில் நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களை கலைக்க துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக சங்கம் சார்ப்பில் சேப்பாக்கத்தில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது.
 
இந்த போராட்டத்தில் இயக்குனர்கள் பாண்டிராஜ், ராஜீவ் முருகன், இரஞ்சித், ராம், நவீன், பாலாஜி சக்திவேல், சீனுராமசாமி உள்ளிட்ட பல இயக்குனர்கள் கலந்து கொண்டு தூத்துக்குடியில் நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர்.