வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 26 மே 2018 (18:03 IST)

அனுமதியின்றி இயங்கும் ஸ்டெர்லைட்? வெளியான அதிர்ச்சி தகவல்...

ஸ்டெர்லை ஆலை அனுமதியின்றி பலமுறை இயங்கியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆலை இயக்கப்பட்ட நாட்களும் வெளியிடப்பட்டுள்ளது. 
 
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சமூக ஆர்வலர் நித்யானந்த் ஜெயராமன் கூறிய சில தகவல்கள் பின்வருமாறு... ஸ்டெர்லைட் ஆலையில் முதல் 4 நாட்கள் கழிந்த உடன் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், தூத்துக்குடி கோட்ட வளர்ச்சி அதிகாரியும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் 7 இடங்களிலும், அதைச் சுற்றி உள்ள 8 கிராமங்களில் நிலத்தடி நீரை எடுத்து சோதனை நடத்தினர்.
 
இந்த சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட பல மடங்கு நிலத்தடி நீர் மாசுபட்டு இருந்தது தெரிய வந்தது என அவர் கூறினார். குடிநீரில் அதிக அளவு ஈயத் தாது தண்ணீரில் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோல் காற்றிலும் அதிகளவு ஸ்டெர்லைட் மாசு கலந்திருப்பதாக அவர் கூறினார். 
 
மேலும், ஸ்டெர்லைட் ஆலை அனுமதியின்றி இயங்கியதாகவும் எந்தெந்த நாட்களில் இயங்கியது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அவை, 
 
# 1997 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை 
# 1999 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை 
# 1999 டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 2005 ஏப்ரல் 18 ஆம் தேதி வரை 
# 2006 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை 
# 2006 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் நவம்பர் 11 ஆம் தேதி வரை 
# 2007 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மே 6 ஆ, தேதி வரை 
# 2007 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 2009 ஜனவரி 1 ஆம் தேதி வரை 
# 2009 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 13 ஆம் தேதி வரை 
# 2010 ஜனவரி 1 ஆம் தேதி முதல் 2011 ஏப்ரல் வரை