திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (09:58 IST)

டி.டி.வி. தினகரன் பேசுவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

அதிமுகவை கைப்பற்றுவோம் என டிடிவி தினகரன் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என அமைச்சர் ஓஎஸ் மணியன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தது முதல் டிடிவி தினகரன் அதிமுகவை கைப்பற்றுவோம் என்றும் அதிமுகவில் பல அமைச்சர்களும் எங்களுக்கு ஸ்லீப்பர் செல் ஆக இருக்கிறார்கள் என்றும் டிடிவி தினகரன் அடிக்கடி கூறிக் கொண்டு வருகிறார் 
 
ஆனால் சசிகலாவின் விடுதலைக்கு பின்னரும் அதிமுகவில் இருந்து இன்னும் ஒருவர் கூட இன்னும் அமமுக பக்கம் வந்ததாக தெரியவில்லை. இந்த நிலையில் அதிமுகவை கைப்பற்றுவோம் என டிடிவி தினகரன் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அமைச்சர் ஓ எஸ் மணியன் தெரிவித்துள்ளார்
 
மேலும் அரசியல்வாதிகள் பேசிக் கொண்டிருந்தால் தான் உயிரோடு இருப்பதாக அர்த்தம் என்றும் டிடிவி தினகரனின் பேச்சும் அப்படித்தான் என்றும் அவர் கூறியுள்ளார். அமைச்சர் ஓஎஸ் மணியன் அவர்களின் இந்த கருத்துக்கு டிடிவி தினகரன் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.