1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2019 (13:11 IST)

இதோ கிளம்பிட்டாங்கல... விஜய் பேச்சுக்கு அதிமுக தரப்பில் எதிர் பேச்சு!

இதோ கிளம்பிட்டாங்கல... விஜய் பேச்சுக்கு அதிமுக தரப்பில் எதிர் பேச்சு!
பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவை சேர்ந்த வைகைசெல்வன் பேசியுள்ளார். 
 
விஜய் - அட்லி கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் விஜய், சுபஸ்ரீ மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துவிட்டு எவன எங்க உட்கார வெக்கனுமோ அவன அங்க உட்கார வெச்சா எல்லாம் நல்லா இருக்கும் என பேசியிருந்தார். 
 
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் வைகைசெல்வன் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார். வைகைச்செல்வன் கூறியதாவது, முன்னர் எல்லாம் ஒரு படம் வெளியானால் அது ஓராண்டுவரையெல்லாம் ஓடிய வரலாறு உண்டு. 
இதோ கிளம்பிட்டாங்கல... விஜய் பேச்சுக்கு அதிமுக தரப்பில் எதிர் பேச்சு!
ஆனால், இப்போது வெளியாகும் படங்களை 20 நாட்களுக்கு மேல் ஒட்டுவதே சிரமமாக உள்ளது. எனவே படத்தை ஓட்ட ஒரு பரபரப்பை உருவாக்க நடிகர்கள் இது போல் பேசுகிறார்கள். அதில் முக்கியமானவராக உள்ளார் நடிகர் விஜய். 
 
யாரை எங்கே வைக்க வேண்டுமோ, அங்கே தான் வைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார், யாரை எங்கே வைக்க வேண்டுமோ அங்கேதான் அவர்களை தமிழக மக்கள் வைத்துள்ளார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் என அனைத்தும் மக்களின் எண்ணத்தின் படியே ஆட்சி நடக்கிறது. 
இதோ கிளம்பிட்டாங்கல... விஜய் பேச்சுக்கு அதிமுக தரப்பில் எதிர் பேச்சு!
10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி நடத்தி வருகிறது. இந்த 10 ஆண்டுகளில் விஜய் படங்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. அவருக்கு எந்த தொல்லையும் தரப்படவில்லை இருப்பினும் தனது படத்தை ஓட வைக்க விஜய் இவ்வாறு பேசுகிறார் என தெரிவித்துள்ளார்.