செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2019 (23:16 IST)

விஜய்க்கு மட்டுமே படம் பண்ணுவேன்: அட்லி உறுதி

விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படத்தின் ஆடியோ விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் இயக்குனர் அட்லி பேசியதாவது:
 
 
‘தெறி’ படத்தை விட இரண்டு மடங்காகவும், மெர்சல் படத்தை விட மூன்று மடங்காகவும் ‘பிகில் படம் இருக்கும் என நம்புகிறேன். இந்த படம் அந்த அளவுக்கு நன்றாக வந்திருப்பதால் எனக்கு அந்த நம்பிக்கை உள்ளது.
 
 
மெர்சல் படத்திற்கு பிறகு எனக்கு பெரிய நடிகர்களை இயக்கும் வாய்ப்புகள் வந்தது. ஆனால் நான் எந்த கதை எழுதினாலும் அதில் தளபதிதான் என் கண்முன் நிற்கின்றார். எனவே நான் மீண்டும் விஜய்யுடன் மட்டுமே படம் செய்ய விரும்புகிறேன். சுருக்கமாக சொன்னால் எங்க அண்ணனுக்கு மட்டும் தான் படம் பண்ணுவேன், வேறு யாருக்கும் பண்ண மாட்டேன். இதுதான் என் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் விஷயம்
 
 
எனக்கும் தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு இந்த படத்தின்போது நிறைய வாக்குவாதம் வந்த்து. ஆனால் இந்த வாக்குவாதங்கள் அனைத்தும் ஒரு அக்காவுக்கும் தம்பிக்கும் இடையே வரும் வாக்குவாதம் போன்றது. இதுபோன்ற நேரத்தில் அப்பா கல்பாதி அகோரம் அவர்கள் எங்களை சமாதானப்படுத்துவார்.
 
 
விஜய் அண்ணா இந்தியாவிலேயே சிறந்த டான்ஸர், அவர் ஒரு மிகப்பெரிய மாஸ் நடிகர். அவருடன் தொடர்ச்சியாக பணிபுரிவது எனக்கு பெருமை’ இவ்வாறு அட்லி பேசினார்