ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 19 செப்டம்பர் 2019 (23:27 IST)

’பிகில்’ ரிலீசுக்கு பின்னர் இந்திய திரைப்படங்களின் டிரண்ட் மாறும்; அர்ச்சனா கல்பாதி

‘பாகுபலி’ திரைப்படம் எப்படி இந்திய சரித்திர சினிமாக்களின் டிரெண்டை மாற்றியதோ அதேபோல் ‘பிகில்’ திரைப்படம் இந்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படங்களின் டிரண்டை மாற்றும் என ‘பிகில் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தெரிவித்துள்ளார்.
 
இன்று நடைபெற்ற ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அர்ச்சனா கல்பாதி மேலும் பேசியதாவது: ‘பாகுபலி’ பாகுபலி 2’ படங்களுக்கு பின்னர்தான் இந்தியாவில் அதிக பட்ஜெட்டில் பிரமாண்டமான சரித்திர படங்கள் உருவாக தொடங்கியுள்ளது. அதேபோல்’பிகில் திரைப்படம் வெளி வந்ததும் இந்தியாவில் விளையாட்டு திரைப்படங்களை இப்படித்தான் எடுக்க வேண்டும் என்ற ஒரு புதிய முறை உருவாகும்.
 
தளபதி விஜய் படத்தை தயாரிக்க நாங்கள் ஆறு வருடங்கள் காத்திருந்தோம். எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் நிச்சயமாக இதுதான் மிகப்பெரிய திரைப்படம் என்று பெருமையுடன் அர்ச்சனா கல்பாதி கூறினார் 
 
மேலும் இந்த படத்திற்காக தளபதி விஜய் 150 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்திருந்தார். ஆனால் எதிர்பாராத காரணத்தினால் படப்பிடிப்பு நீடிக்க வேண்டிய சூழ்நிலையில் அவர் எங்களுக்காக கூடுதலாக 20 நாட்கள் நடித்து கொடுத்தார். எனவே அவருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அர்ச்சனா கல்பாதி தெரிவித்தார்.