முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா? இன்று அதிமுக ஆலோசனைக் கூட்டம்!

Last Updated: வெள்ளி, 18 செப்டம்பர் 2020 (11:43 IST)

அதிமுக ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் அதற்காக தயாராகி வருகின்றன. திமுகவில் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின் என்பது உறுதியாகிவிட்ட நிலையில் அதிமுகவில் யார் என்பது இன்னும் தெரியவில்லை. இது சம்மந்தமாக சில நாட்களாக சர்ச்சைகள் அதிமுகவில் எழுந்துள்ளன.

இந்நிலையில் சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளது. இதில் கட்சியின் அனைத்து முக்கியத் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.இதில் மேலும் படிக்கவும் :