அதிமுகவைக் காப்பாற்றிய கொங்கு மண்டலம்… அங்கு மட்டும் இத்தனை தொகுதிகள் முன்னிலையா?
கொங்கு மண்டலத்தில் மட்டும் அதிமுக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
கொங்கு மண்டலம் எப்போதுமே அதிமுக வின் எஃகு கோட்டையாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இப்போதும் அதிமுகவிற்கு ஒரு கௌரவமான தோல்வியை கொடுக்கபோவது கொங்கு மண்டலம்தான். மற்ற எல்லா பகுதிகளிலும் பின்னடைவில் இருக்கும் அதிமுக கொங்கில் 35 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. அங்கு திமுகவுக்கு 14 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை கிடைத்துள்ளது. கடந்த முறை அதிமுக 33 தொகுதிகளில் வெற்றி பெற 8 தொகுதிகள் மட்டுமே திமுகவுக்கு கிடைத்தது.