1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. admk head choose the candidates based on astrology

2 தேர்தல்களில் தோல்வி!.. ஜோசியத்தை வைத்தே வேட்பாளர்கள் தேர்வு!.. அதிமுக அப்டேட்!..

admk candidates
சினிமா அரசியல் இரண்டிலுமே ஜோதிடத்தை அதிகம் நம்புவார்கள். ஏனெனில் இரண்டுமே வெற்றி தோல்வி சம்பந்தப்பட்டது .ஒரு இயக்குனர் படம் எடுக்க வந்தால் அந்த இயக்குனரின் ஜாதகத்தை பார்த்து வாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள்.

அதேபோல்தான் அரசியலும்.. எல்லா அரசியல் தலைவருக்குமே ஒரு ஆஸ்தான ஜோதிடரை வைத்திருப்பார்கள்.. ஜெயலலிதாவெல்லாம் பல ஜோதிடர்களிடம் ஜோசியம் பார்த்தார்.. வெற்றிக்காக பல பூஜைகளை அவர் செய்திருக்கிறார். அவ்வளவு ஏன்?. பகுத்தறிவு பேசும் திமுக குடும்பத்திலேயே ஜோதிடம் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு திருப்பூரை சேர்ந்த ரிஷியானந்தா என்பவ தான் ஆஸ்தான ஜோதிடராக இருப்பவர்..

அதேபோல் விஜய்க்கு ராதன் பண்டிட் என்பவர்தான் ஜோசியம் பார்த்து வருகிறார். இந்நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என கருதும் அதிமுக தரப்பு தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களை ஜாதகத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுப்பதாக சொல்லப்படுகிறது..

அதாவது வேட்பாளர் தேர்வில் ஜாதகமும் முக்கிய பங்கு வகிக்கிறது. புதிதாக விருப்ப மனு கொடுத்தவர்கள், கடந்த முறை போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் ஆகியவர்களை கட்சி தலைமையே ஜோதிடர் ஒருவரிடம் அனுப்பி ஜாதகம் பார்க்க சொல்கிறார்களாம். ஜோசியர் கொடுக்கும் ரிப்போர்ட்டின் அடிப்படையில் வேட்பாளர்களை அதிமுக தேர்வு செய்ததாக சொல்லப்படுகிறது..

குறிப்பாக போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு இருக்கும் என ஜோதிடர் சொல்பவர்களுக்கு மட்டுமே சீட் கொடுக்கப்படுவதாக சொல்கிறார்கள். கடந்த இரண்டு தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்ததால் எடப்பாடி பழனிச்சாமி இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக சொல்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
விதிமுறைகளை காட்டி எங்களை முடக்க நினைக்கிறது திமுக!.. கொதிக்கும் தவெக நிர்வாகிகள்..