1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 1 மார்ச் 2023 (21:03 IST)

ஒரு வாக்குறுதி கொடுத்தது தி.மு.க.வுக்கு நினைவிருக்கிறதா?- டிடிவி. தினகரன் கேள்வி

சிலிண்டர் விலை இன்று உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கடந்த தேர்தல் அறிக்கையில் அப்படி ஒரு வாக்குறுதி கொடுத்தது தி.மு.க.வுக்கு நினைவிருக்கிறதா? என்று கேள்வி டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

சென்னையில்,இன்று, வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சமையல் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை 1068 ரூபாய் என இருந்த சமையல் வருவாய் சிலிண்டர் 1118.50 ரூபாய்க்கு விற்பனை ஆகும்  எனவும், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.223 உயர்ந்து 2268 என விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,சிலிண்டர் விலை உயர்வுக்கு அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

மக்களை நேரடியாக பாதிக்கும் வகையில் வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு மேலும் உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வு பெரும் சுமையாக இருக்கும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றால் மக்கள்  பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்விலிருந்து அவர்களைக் காப்பாற்றும் விதமாக தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவார்களா?

தேர்தல் அறிக்கையில் அப்படி ஒரு வாக்குறுதி கொடுத்தது தி.மு.க.வுக்கு நினைவிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.