1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (13:28 IST)

அதிமுக தேர்தலுக்கு தடை கோரி வழக்கு! – தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுகவில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலுக்கு தடை கோரி தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

சமீபத்தில் அதிமுக செயற்குழு கூட்டம் கூடிய நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளரை தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட முறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து தற்போது அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு மீண்டும் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் அதிமுக உட்கட்சி தேர்தல் நடத்த தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த மனுவில் தேசிய தேர்தல் ஆணையத்தின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்து உயர்நீதிமன்றம், அதிமுக உள்கட்சி தேர்தலுக்கும், தேர்தல் ஆணையத்திற்கு என்ன தொடர்பு? எதற்காக தேர்தல் ஆணையத்தின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என விளக்கமளிக்க கூறி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.