புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 7 டிசம்பர் 2021 (09:09 IST)

அதிமுகவுக்கு 2 தலைமைகள் இருந்தாலும் உரிமையாளர் ஒருவர்தான்: ஜோதிமணி எம்பி

அதிமுகவுக்கு  இரண்டு தலைமைகள் இருந்தாலும் உரிமையாளர் ஒருவர் தான் என காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்
 
அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைப்பாளர் என இரண்டு தலைமைகள் இருக்கும் நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: அதிமுகவுக்கு இரட்டைத் தலைமை இருந்தால் என்ன, மூன்று தலைமை இருந்தால் என்ன! உரிமையாளர் பாஜக ஒருவர் மட்டுமே!
 
ஜோதிமணியின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் கூறியிருப்பதாவது: என்ன செய்வது நீங்கள் ஒரு இரண்டு குடும்பத்திற்காக வேலை செய்ய பழகியுள்ளீர்கள் சகோதரி. இரண்டு தலைகள் அதிமுகவோ பாஜக சாமானியர் மக்களின் ஆட்சியோ உங்களுக்கு வித்தியாசமாக தான் இருக்கும், இங்கே உரிமையாளர் மக்கள் மட்டுமே!