திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 28 ஜனவரி 2022 (10:45 IST)

நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும்! – அதிமுக – பாஜக உரசல்!

அதிமுக எம்.எல்.ஏக்கள் குறித்து விமர்சித்ததற்கு பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் தெரிவித்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டன. தொடர்ந்து 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலிலும் தொடர்ந்த இந்த கூட்டணி தற்போதைய நகர்புற உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ”சட்டமன்றத்தில் ஆண்மையோடு, முதுகெலும்போடு பேசக்கூடிய அதிமுகவினரை பார்க்க முடியவில்லை” என பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணி கட்சியினரையே பாஜக விமர்சித்துள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக எம்.எல்.ஏக்கள் அதிமுக தயவால்தான் வெற்றி பெற்றனர் என கூறியுள்ள அதிமுக எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன், நயினார் நாகேந்திரன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் இரு கட்சிகளிடையே பரபரப்பு எழுந்துள்ளதாக தெரிகிறது.