செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 31 ஜனவரி 2022 (08:38 IST)

வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது அதிமுக: தனித்துவிடப்படுகிறதா பாஜக?

அதிமுகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே திடீரென அதிமுக தனது முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கோவை மேயர் தகுதி உள்பட பல தொகுதிகளை பாஜக அதிமுகவிடம் கேட்ட நிலையில் அதற்கு அதிமுக  உடன் படவில்லை என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் திடீரென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்
 
அதிமுகவின் இந்த நடவடிக்கையால் பாஜக கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாகவும் இந்த ஆலோசனைக்கு பின்னர் பாஜக தனித்து போட்டியிடுவது குறித்து அறிவிப்பை வெளியிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனால் எந்த கூட்டணியிலும் சேராமல் பாஜக தனித்து விடப்பட்டதாக கருதப்படுகிறது.