வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 31 ஜூலை 2023 (10:24 IST)

அதிமுக எம்எல்ஏ தலைமையில் விவசாயிகள் உண்ணாவிரதம்: என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு

புவனகிரி தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் தலைமையில் என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் நடைபெற்று வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
முதலில் வளையமாதேவி கிராமத்தில் அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தார். ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து தற்போது புவனகிரி எம்எல்ஏ அலுவலக முன் போராட்டம் நடைபெற்று வருகிறது. 
 
விளைநிலங்களில் கால்வாய் வெட்டும் பணியை என்எல்சி நிர்வாகம் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் என்எல்சி நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran