திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 30 ஜூலை 2023 (15:14 IST)

அதிமுக கூட்டணிக்கு அவசியமில்ல.. எங்க ப்ளானே வேற! – சமத்துவ மக்கள் கட்சி!

சமத்துவ மக்கள் கட்சியின் சமத்துவ விருந்து நிகழ்ச்சியின்போது பேசிய அதன் தலைவர் சரத்குமார் அதிமுகவுடன் கூட்டணிக்கு அவசியமில்லை என பேசியுள்ளார்.




சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக நடிகர் சரத்குமார் தொடர்ந்து இருந்து வருகிறார். கடந்த தேர்தல்களில் ச.ம.க கட்சி அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தது. பின்னர் அதில் இருந்து விலகி கடந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணியில் இருந்தது. இந்நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி எப்படி அமையும்? அதே கூட்டணி தொடருமா என பல கேள்விகள் உள்ளன.

இந்நிலையில் இன்று சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சரத்குமார் மக்களுக்கு விருந்து பறிமாறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுகவுடனான கூட்டணி  குறித்து பேசியபோது “அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் சமத்துவ மக்கள் கட்சிக்கு இல்லை. பணமில்லா அரசியல் என்ற நிலையில் தேர்தலை தனித்து சந்திப்பதே எங்கள் நோக்கம்” என பேசியுள்ளார்.

Edit by Prasanth.K