வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 17 மார்ச் 2024 (10:49 IST)

தேர்தல் விதிமுறைகள் அமல்.. திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன என்பது தெரிந்தது. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து உள்ளதை அடுத்து திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்கு எம்எல்ஏக்கள், எம்பிகள் இடம் இருந்து வரும் பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ’திருமலையில் தங்குதல் மற்றும் தரிசனத்திற்கான அரசியல்வாதிகளின் பரிந்துரை கடிதங்கள் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்த நிமிடத்திலிருந்து ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது

எனவே புரோட்டோகால் விதிகளின்படி அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் குடும்பங்கள் கோயிலுக்கு வந்தாலும் அவர்கள் மற்ற பக்தர்கள் போலவே வழி நடத்தப்படுவார்கள் என்றும் தேர்தல் செயல்முறை முடியும் வரை எந்தவிதமான பரிந்துரை கடிதங்களும் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் இதை கருத்தில் கொண்டு விஐபிகள் இந்த விஷயத்தில் தேவஸ்தானத்துடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது


Edited by Siva