வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 14 மார்ச் 2024 (13:46 IST)

பீகாரில் சுமூகமாக முடிந்த தொகுதி பங்கீடு.. நிதிஷ்குமார் கட்சிக்கு எத்தனை தொகுதிகள்?

பீகார் மாநிலத்தில் பாரதிய ஜனதா மற்றும் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளின் நிர்வாகிகள் கடந்த சில நாட்களாக தொகுதி உடன்பாடு குறித்த பேச்சு வார்த்தை நடத்தினர் 
 
இந்த நிலையில் தற்போது இந்த பயிற்சி வாரத்தை முடிவுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிஹாரிலுள்ள மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 17 தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்றும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் மீதமுள்ள தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த  மக்களவைத் தேர்தலில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா ஆகிய இரு கட்சிகளும் 17 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் தற்போது ஐக்கிய ஜனதா தளத்திற்கு ஒரு தொகுதி குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள சிராக் பாஸ்வானின் எல்ஜேபி கட்சி 5 தொகுதிகளிலும், உபேந்திர குஷ்வாஹா மற்றும் ஜித்தன் ராம் மாஞ்சியின் கட்சிகள் தலா ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva