வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 27 டிசம்பர் 2023 (07:43 IST)

அதிமுக மாநாட்டிற்கு பிறகு கூட்டணி கட்சிகள் நினைப்பது என்ன?

ADMK
நேற்று அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நடந்த நிலையில் அதில்  பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை அழுத்தமாக கூறினார். இருப்பினும் தங்களுடைய அணியில் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இணையும் என்பது குறித்த தகவலை அவர் வெளியிடவில்லை.

இந்த நிலையில் அதிமுக உடன் கூட்டணியிலிருந்த பாமக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் அதிமுகவுடன் இணைய வாய்ப்பில்லை என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

ஒரு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் அல்லது பாஜக ஆகிய இரண்டு அணிகளில் ஒரு அணியை ஆதரித்தால் மட்டுமே வாக்குகள் சேகரிக்க முடியும் என்றும் இரண்டு அணிகளையும் எதிர்த்து எப்படி மக்களிடம் ஓட்டு கேட்க முடியும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் நினைக்கிறார்கள்.

எனவே அதிமுக கூட்டணி கட்சிகள் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  அதுமட்டுமின்றி திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியேற வாய்ப்பு இல்லை என்றும் திமுக மீது மக்கள் அதிருப்தியில் இருந்தாலும் திமுகவுக்கு ஆதரவாக கூட்டணி கட்சிகள் பேசிக் கொண்டிருப்பதால் அந்த கூட்டணியில் எந்தவித மாற்றமும் இருக்காது என்றும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்

Edited by Siva