வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (16:53 IST)

நான் சில விஷயங்களை அவிழ்த்துவிட்டால் எடப்பாடி திகாருக்கு சென்றுவிடுவார்- ஓ.பன்னீர்செல்வம்

அதிமுகவில் இருந்து  சமீபத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள்  நீக்கப்பட்டனர்.
 
இதையடுத்து, அவர் , அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் மற்றும் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
 
இன்று கோவையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்  பேசிய அவர்,  நிதிச்சுமையால் ஜெயலலிதா என்னிடம்  ரூ.2 கோடி பணம் கடனாகக் கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது:   2 முறை பதவியை  ஜெயலலிதா என்னிடம் கொடுத்தார். நான் அவரிடமே கொடுத்துவிட்டேன்.3 ஆம் முறை சசிகலாவிடம் கொடுத்துவிட்டேன். என்னை  யாரும் துரோக் என கூறமுடியாது.  நான் சில விஷயங்களை அவிழ்த்துவிட்டால் எடப்பாடி திகாருக்கு சென்றுவிடுவார். 
 
மேலும், சிறப்பான ஆட்சியை தந்துள்ளார். அவர் மீண்டும் பிரதமரானால் இந்தியா சுபிட்சமாக, நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.