1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 26 டிசம்பர் 2023 (14:13 IST)

கோ பேக் ஸ்டாலின்' என எங்களால் ட்ரெண்டிங் செய்ய முடியும்: அண்ணாமலை

பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் இன்று காலை முதல் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது
 
பிரதமர் மோடியின் தமிழக வரவை வரவேற்கும் விதமாக கம் பேக் மோடி என தமிழக மக்கள் பதிவு செய்ய வேண்டும். தமிழக முதல்வரை தமிழகத்தில் கேவலப்படுத்த பா.ஜ.க விரும்பவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையை விட்டு எங்கு சென்றாலும் ஸ்டாலினுக்கு எதிராக, 'கோ பேக் ஸ்டாலின்' என எங்களாலும் ட்ரெண்டிங் செய்ய முடியும். 
 
ஆனால் முதல்வர் பதவிக்கு நாங்கள் மரியாதை தருகிறோம். தி.மு.க ஐ.டி விங்கை விட 1000 மடங்கு  தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் எங்கு சென்றாலும் கோ பேக் ஸ்டாலின் என்பதை ட்ரெண்ட் செய்ய முடியும். இந்த சவாலுக்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஒப்புக்கொள்வாரா?. 
 
பா.ஜ.க ஐ.டி விங் சமூகவலைதளங்களில் கம்பு சுற்றுபவர்கள். எங்களிடம் தி.மு.க ஐ.டி விங் தனது வேலையை காட்டக்கூடாது" என்று தெரிவித்தார்.
 
Edited by Siva