1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 22 ஜூன் 2022 (11:14 IST)

அரசு கலை கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பம்: குவியும் மாணவர்கள்!

Colleges
அரசு கலைக் கல்லூரிகளில் இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து அரசு கல்லூரிகளில் சேர மாணவர்கள் குவிந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
நேற்று முன்தினம் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து ஜூன் 22 முதல் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது
 
இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
https://www.tngasa.in/ என்ற இணையதளத்தில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்ய ஜூலை 7ஆம் தேதி கடைசி நாள் என்றும் உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.