1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. adhav arjuna said tvk alliance will decide pm

2029 பிரதமர் யார்னு நாங்கதான் முடிவு பண்ணுவோம் - ஆதவ் அர்ஜுனா

adhav arjuna
2026 சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்க மேலும் 10 எம்.எல்.ஏக்கள் தேவைப்பட்டபோது முதல் கட்சியாக ஆதரவு கொடுத்தது காங்கிரஸ். காங்கிரஸ் அப்போது திமுக கூட்டணியில் இருந்தது. அதன்பின் விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் போன்ற கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்ததால் போதுமான ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்தது. விஜயும் முதலமைச்சராகிவிட்டார்..

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பதால் 2029 பாராளுமன்ற தேர்தலின் போது தவெகவின் ஆதரவு காங்கிரஸுக்கு கிடைக்கும் என ராகுல்காந்தி நம்புகிறார். ஆனால், விஜயை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்துவோம் என சில தவெக அமைச்சர்களும், நிர்வாகிகளும் பேச தொடங்கினார்கள். தமிழர் ஒருவர் பிரதமராக வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டசபையிலேயே பேசினார்.

இது காங்கிரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்  ‘முதலமைச்சர் விஜய் தெளிவாக இருக்கிறார். அமைச்சர்களும் நிர்வாகிகளும் அவர்களின் ஆசையில் அப்படி சொல்கிறார்கள்’ என கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்று ஒரு விழாவில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ‘இந்தியாவின் வெற்றியை தமிழகத்தில் இருந்து உருவாக்கப் போகிறோம்.. இது வரலாறாகப் போகிறது.. இதை உடைப்பதற்காக தான் புதிய நடிகர்கள் டெல்லிக்கு சென்று உட்கார்ந்திருக்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் நடக்காது. எல்லாவற்றையும் பார்த்து விட்டோம். யார் வேண்டுமானாலும் வரட்டும். எங்கிருந்து வேண்டுமானாலும் வரட்டும். நமக்கு திமுக போர் அடித்து விட்டது. சைத்தானின் பிள்ளைகாக மாறிவிட்டனர். அடுத்து புதிது புதிதாக சைத்தான் பிள்ளைகள் வருவார்கள். எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.. 2029 தேர்தலில் யார் பிரதமர் என்பதை மதச்சார்பற்ற சமூக நிதி வெற்றி கூட்டணிதான் தீர்மானிக்கும்’ என பேசியிருக்கிறார்.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
100 வருஷம் ஆனாலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது - ஆதவ் அர்ஜுனா