வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (12:43 IST)

3000 பேருக்கு ரூ.10,000 நிவாரணத் தொகை - ஸ்டாலின்!!

3000 பேருக்கு ரூ.10,000 நிவாரணத் தொகை - ஸ்டாலின்!!
விநாயகர் சிலைகளை செய்து வரும் 3000 பேருக்கு ரூ.10,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. 
 
மாநிலத்தில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரக்கூடிய சுமார் 12 ஆயிரம் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு, மழைக் காலங்களில் தொழில் செய்ய இயலாத நிலையிலே, அவர்களுக்கு நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 
 
இந்த 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு மழைக் கால பாதிப்பு நிவாரணத் தொகை போக, கூடுதலாக மேலும் 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக அளிக்கப்பட்டு, மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.