செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: திங்கள், 6 செப்டம்பர் 2021 (18:35 IST)

உருளைக்கிழங்கு சுவைக்க ரூ.50 ஆயிரம் சம்பளம்

இந்த உலகத்தில் சாப்பிட்டு ருசி பார்ப்பதற்குச் சம்பளம் போட்டுக் கொடுத்தால் அதை யாராவதும் வேண்டாம் என்றா சொல்வார்கள். அதேபோல் உருளைக்கிழங்கு சாப்பிட ரூ.50ஆயிரம் சம்பளம் தருவதாக இங்கிலாந்து நாட்டில் ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது.  

இங்கிலாந்து நாட்டில் இயங்கிவரும் The Botanist என்ற உணவகம் உருளைக்கிழங்கை ருசிபார்க்கும் வேலைக்கு ஆட்களைத் தேடொ வருகிறது. இந்த வேலைக்குச் சம்பளமாக ரூ.50 ஆயிரம் தரப்படும் எனவும், இந்த வேலைக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 19 கடைசி என அறிவித்துள்ளனர்.

இதனால் அந்நாட்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.