செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 6 செப்டம்பர் 2021 (17:20 IST)

வறுத்த உருளைக்கிழங்கை சாப்பிட ரூ.50 ஆயிரம் சம்பளம்: பிரபல ஹோட்டல் அறிவிப்பு

பிரபல உணவகம் ஒன்று தங்கள் ஹோட்டலில் தயாராகும் வறுத்த உருளைக்கிழங்கை சாப்பிட்டு அதன் ருசி எப்படி இருக்கிறது என்று கூறுவதற்கு ரூபாய் 50 ஆயிரம் சம்பளத்தில் ஆட்களை தேடி வருவதாக அறிவித்துள்ளது 
 
இங்கிலாந்து நாட்டிலுள்ள தி பாட்டனிஸ்ட் என்ற உணவகம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தங்கள் உணவகம் சுவையான வறுத்த உருளைக்கிழங்கை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக வறுத்த உருளைக்கிழங்கை சுவைத்துப் பார்க்கும் வேலைக்கு ஆட்களை தேடி வருகிறது. இதற்கு மாதம் ரூபாய் 50 ஆயிரம் வரை சம்பளம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
வாடிக்கையாளர்களுக்கு சுவையான உணவை கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த பணிக்கு ஆள் எடுக்க இருப்பதாகவும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 10-ஆம் தேதி வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு செய்துள்ளது. இதனை அடுத்து ஏராளமானோர் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன