வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2024 (18:15 IST)

டிரக் - பேருந்துகளுக்கான புதிய ரேடியல் டயர்.! சியேட் நிறுவனம் அறிமுகம்..!!

CEAT Tyre
சியேட் நிறுவனத்தின் டிரக் மற்றும் பேருந்துகளுக்கான  புதிய ரேடியல் டயர் அறிமுகம் விழா சென்னையில் நடைபெற்றது.
 
இந்தியாவின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான சியேட் கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு டயர்களை தயாரித்து வருகிறது. தற்போது இந்நிறுவனம் பேருந்துகள் மற்றும் டிரக்குகளுக்கான புதிய ரேடியல் டயர்களையும் அதன் உற்பத்தி ஆலையையும் திறந்துள்ளது.
 
இதுகுறித்து அதன் நிர்வாக இயகுனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அர்ணாப் பானர்ஜி கூறுகையில்,  சியேட் நிறுவனம் தற்போது சிறந்த முறையில் கார்கள் மாற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு டயர்களை தயாரித்து வருகிறது.
 
தற்போது பேருந்து மற்றும் டிரக்குகளுக்கான புதிய ரேடியல் டயர் மற்றும் அதன் உற்பத்தி ஆலையை திறப்பதில் பெருமையும், மகிழ்சியும் அடைகிறது. வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்றி வரும் சியட் நிறுவனம் தற்போது புதிய பரிமாணம் அடைந்துள்ளது.
 
இந்த புதிய பிரிவின் மூலம் அடுத்த 12 மாதங்களில் தினசரி 1500 டயர்களின் உற்பத்தித் திறனை  புதிய தயாரிப்பில் படிப்படியாக எட்டும் என்றும், தொடர்ந்து சர்வதே  சந்தைகளில் சியேட் நிறுவனம் அதன் தடத்தை விரிவுபடுத்துவதற்கான  ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
மேலும் உள்நாட்டு மற்றும் சர்வதே  சந்தைகளில் உயர் செயல்திறன் கொண்ட வாகனங்களின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சியேட் நிறுவனம் இயங்கிவருவதாகவும் அர்ணாப் பானர்ஜி கூறியுள்ளார்.

 
இந்நிகழ்ச்சியில் சியேட் நிறுவனதின் அதிகாரிகள் ஜெயஷங்கர் குருப்பால், ஷ்ரவன் குமார் சுப்பையா, ரெஞ்சி ஐசக்,  ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர் .