வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2024 (19:04 IST)

மனைவியை வைத்து சூதாடி தோற்ற கணவர்.. பாலியல் பலாத்காரம் செய்யவும் அனுமதி..உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

Gambling
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மனைவியை வைத்து சூதாடிய கணவர் சூதாட்டத்தில் தோற்றவுடன் தனது நண்பர்களுக்கு மனைவியை பாலியல் பலாத்காரம் செய்யவும் அனுமதித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
மனைவியை வைத்து சூதாடியதாக மகாபாரதத்தில் கதை உள்ள நிலையில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ராம்பூர் என்ற பகுதியில் சூதாட்டத்திற்கு அடிமையான கணவர் தனது மனைவியை வைத்து சூதாடியுள்ளார்.
 
இந்த சூதாட்டத்தில் மனைவியை வைத்து அவர் விளையாடி தோற்ற நிலையில் அவரின் நண்பர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தவும் அனுமதித்துள்ளதாக தெரிகிறது. இதை தடுத்த மனைவியின் விரலையும் உடைத்து சித்திரவதை செய்து உள்ளார்.
 
மது பழக்கம் மற்றும் சூதாட்டத்தில் தனது கணவர் இதுவரை 7 ஏக்கர் நிலம், நகைகள் என எல்லாத்தையும் இழந்து உள்ள நிலையில் தன்னையும் வைத்து சூதாடி உள்ளதாக அவருடைய மனைவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
 
மேலும் இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில் கணவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran