ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2024 (18:09 IST)

பி.டி.உஷா மீது வினேஷ் போகத் பரபரப்பு புகார்.! ஆதரவு அளிப்பது போல் நடித்ததாக குற்றச்சாட்டு..!!

Vignesh Phogat
இந்திய ஒலிம்பிக் அமைப்பின் தலைவர் பி.டி.உஷா தனக்கு ஆதரவளிப்பது போல் நடித்ததாக மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் குற்றம் சாட்டியுள்ளார்.
 
நடந்து முடிந்த ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் இறுதி போட்டி வரை சென்று 100 கிராம் எடை கூடியதால்  வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.பதக்கத்தை இழந்தாலும், இந்தியா முழுவதும் அவருக்கு ஆதரவு கரம் நீட்டப்பட்டது.
 
ஒலிம்பிக் போட்டியின் போது நீர்சத்து குறைபாடு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவரான பி.டி.உஷா, வினேஷ் போகத்தை மருத்துவமனையில் சந்தித்த புகைப்படம் வெளியானது.
 
இதுகுறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள வினேஷ் போகத், பி.டி.உஷா என் அனுமதியின்றி  என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதோடு,  அந்தப் புகைப்படத்தை என்னிடம் சொல்லாமல் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
 
இங்கு எல்லாவற்றிலும் நிறைய அரசியல் இருக்கிறது என்றும் தனக்கு ஆதரவு அளிப்பது போல் பி.டி.உஷா நடித்தார் என்றும் பாரிஸிலும் அதுதான் நடந்தது என்றும் வினேஷ் போகத் குற்றம் சாட்டி உள்ளார்.

 
அண்மையில் காங்கிரஸில் இணைந்த வினேஷ் போகத்  ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.