தொடர்புடைய செய்திகள்
- விஜயகாந்த் வீட்டில் கனிமொழி, ராஜாத்தி அம்மாள்..! பிரேமலதாவிற்கு ஆறுதல்.!!
- மகாத்மா காந்தி நினைவு தினம்..! காந்திக்கு பணிவுடன் அஞ்சலி செலுத்துகிறேன் - தமிழக ஆளுநர்
- விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சிம்பு அஞ்சலி.! திருமதி. பிரேமலதாவை சந்தித்து ஆறுதல்.!!
- மறைந்த விஜயகாந்த் படத்திறப்பு விழா.! நினைவேந்தல் நிகழ்ச்சி.!!
- கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழப்பு!
விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகை ரம்பா அஞ்சலி..! பிரேமலதாவை சந்தித்து ஆறுதல்..!!
திரைப்பட நடிகை ரம்பா மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியதோடு, பிரேமலதாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி காலமானார். அவரது உடல் தேமுதிக தலைமை கழகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அரசியல்வாதிகள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திரைப்பட நடிகை ரம்பா மற்றும் கலா மாஸ்டர் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் வந்து, சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதை அடுத்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
